நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் சிம்ம வாகன கால சம்ஹார பைரவருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் மஞ்சள், பஞ்சாமிர்தம், தேன், பால், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபா ஆராதனை நடைபெற்றுள்ளது. இதே போல் கோவில் உள் பிரகாரத்தில் இருக்கும் மகாகால சம்ஹார பைரவருக்கும், காசி பைரவருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
Categories