போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற போலீஸ் தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 83 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 69 ஆண்களும் 14 பெண்களும் போலீசாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்த பணி நியமன ஆணையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வழங்கியுள்ளார். மேலும் நேர்மையாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டுமென பணி நியமனம் பெற்ற போலீஸ்காரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.