Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தேர்தலன்று இதை கண்டிப்பா வழங்கணும் … மீறினால் புகார் குடுங்க… தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்..!!

தேர்தல் அன்று விடுமுறையுடன் கூடிய ஊதியம் வழங்காத நிறுவனங்கள் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளிக்கலாம் என்று திண்டுக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தேர்தலை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தனியார் மற்றும் பொதுத்துறை வணிக வளாகங்கள், நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், ஓட்டல்கள் ஆகியவற்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை தேர்தல் அன்று வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் மற்றும் பொதுத்துறை வணிக வளாகங்கள், நிறுவனங்கள் என அனைத்து நிறுவனங்களிலும் தேர்தல் தினத்தன்று விடுமுறையுடன் கூடிய ஊதியம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென்று தொழிலாளர் உதவி ஆணையர் ராமராஜ் அறிவித்துள்ளார். மேலும் தொழிலாளர் துறை சார்பில் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்கலாம் என்று அவர் அறிவித்தார்.

தேர்தல் நாளன்று விடுமுறை வழங்காத நிறுவனங்கள் குறித்து அதிகாரிகளிடம் செல்போன் எண்களில் தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம் என்றார். துணை ஆணையர் பாலசுப்பிரமணியன் 99523 05662, தொழிலாளர் உதவி ஆணையர் ராமராஜ் 94438 25445, உதவி ஆய்வாளர்கள் சுதர்சன் 88258 96411, அருண் பாலாஜி 99944 48156, சரவணகுமரன் 99942 12351, குமரகண்ணன் 97913 55205, தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சுப்பையன் 89460 23274, செந்தில் ஆண்டவன் 80728 68361, நஸ்ரின் பானு 90806 95576 ஆகியோர்களிடம் புகார் அளிக்கலாம் என்று தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் சுகாதார மற்றும் தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தேன் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் கட்டிட தொழிலாளர்கள், தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், ஒப்பந்த மற்றும் கூலி தொழிலாளர்கள் ஆகியோர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை தேர்தலன்று அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |