Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தலின் போது ஏற்பட்ட மோதல்… அ.தி.மு.க. பிரமுகர் தந்தை மரணம்… போலீஸ் பலத்த பாதுகாப்பு..!!

சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட மோதலில் திருபுவனத்தில் அதிமுக பிரமுகருடைய தந்தை உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே வயல்சேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. அப்போது வாக்குச்சாவடிக்கு வெளியே திமுகவினரும், அதிமுகவினரும் மோதிக்கொண்டனர். இந்த முதலில் இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் 26 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். அந்த மோதலில் சிலர் மண்வெட்டியால் அதிமுக பிரமுகர் ராமகிருஷ்ணனின் தந்தை நாராயணனை தாக்கியுள்ளனர். அதில் நாராயணன் பலத்த காயம் அடைந்தார்.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். அதன் பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. மானாமதுரை எம்.எல்.ஏ. நாகராஜன், சிவகங்கை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், அதிமுக மாவட்ட செயலாளருமான செந்தில்நாதன் மற்றும் பலர் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பின்னர் அங்குள்ள மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அங்கு பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

Categories

Tech |