தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் மக்கள் நீதி மையம் கட்சி கூட்டணி அமைப்பது பற்றி பேச்சு வார்த்தை நடத்துகிறது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆம் ஆத்மி மற்றும் மக்கள் நீதி மையம் கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் இரு கட்சிகளையும் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். டெல்லியில் ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு தமிழகத்தில் எந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.