ட்ரம்ப் அவர்கள் அதிபர் தேர்தலில் தோற்ற அதே நாளில் லண்டனில் அவரின் மெழுகு சிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தற்போது நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் 294 வாக்குகள் பெற்று அமெரிக்காவின் ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவரை எதிர்த்து போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் 214 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். இந்நிலையில் டிரம்ப் அவர்களுக்கு அதிபர் தேர்தலில் தோற்ற அதே நாளில் இங்கிலாந்தில் உள்ள ட்ரம்ப் மெழுகு சிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மெழுகு சிலையானது டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் கோல்ப் விளையாடும் ஆடையில் இருப்பது போல லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ட்ரம்ப் அவர்கள் கோட் சூட் போட்டுக் கொண்டு இருந்த மெழுகு சிலையுடன் முன்னாள் அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரின் சிலைகளும் நிறுவியுள்ளது குறிப்பிடதக்கது.
Donald Trump's wax figure has been re-dressed into golf attire at Madame Tussauds, London, after Joe Biden was named the winner in the #USElectionResults2020 pic.twitter.com/A7g2gkK1Fc
— PA Media (@PA) November 7, 2020