Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தேர்தலில் தோல்வியடைந்த தந்தை…. மகள் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தியர்…!!

தேர்தலில் தந்தை தோல்வி அடைந்ததால் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆசூர் கிராமத்தில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வான்மதி என்ற மகள் இருந்துள்ளார். இந்த இளம்பெண் கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பத் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். ஆனால் சம்பத் 65 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்த வான்மதி தனது தந்தைக்கு “சாரி டாடி ஐ மிஸ் யூ” என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதையடுத்து வீட்டிலிருந்து வெளியே சென்ற வான்மதி நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

இதனையடுத்து அங்குள்ள கிணற்றில் வான்மதி சடலமாக கிடப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வான்மதியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |