சட்டப்பேரவைத் தேர்தலில் 100 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க போவதக மேற்குவங்க முதல்வர் அறிவிப்பு கொடுத்துள்ளார்.
பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்ற மாநிலமாக மேற்கு வங்காளம் உள்ளது. இதனையடுத்து மேற்கு வங்காளத்தின் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் உள்ள 294தொகுதிகளுக்கு 100 பெண் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளார். அதைபோல் இவர் 2019 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 41% இடங்களை பெண்களுக்கு ஒதுக்கியுள்ளார். அதேபோல் 2020ஆம் ஆண்டு காலியான மாநிலங்களவையில் 4 தொகுதிகளில் 2 தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி உள்ளாட்சி தேர்தலில் 50% இடங்களை பெண்களுக்கு ஒதுக்கியுள்ளார். மேலும் தற்போது நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் மொத்த வேட்பாளர்களில் 30% பேரை பெண் வேட்பாளராக போட்டியிட வைக்கிறார். இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சி இவரை எதிர்த்து வரும் நிலையில் “உங்கள் வாக்கு வங்கத்தின் மகளான எனக்கே” என்று தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.