தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தேர்தல் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படும் 11 ஆவணங்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. அதாவது ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை திட்டத்தின் அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி- அஞ்சலக கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் லைசன்ஸ், பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், பணி அடையாள அட்டைகள், நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது