நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களுக்கு பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடித்து நகராட்சி பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
அதன்படி நாமக்கல், ராசிபுரம், பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு ஆகிய 5 நாகராட்சிகள் மற்றும் 19 பேரூராட்சிகளில் 447 பதவிகளுக்கு கவுன்சிலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்.