Categories
அரசியல்

“தேர்தலுக்காக தான் இதை பண்றாங்க!”…. பாஜகவின் பலே திட்டம்…. ஒரே போடு போட்ட பிரியங்கா…..!!!!

வருகின்ற 10-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா, “சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் மோடி அரசு திட்டமிட்டு முக்கிய திட்டங்களை செய்யத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது அந்தக் கட்சியின் சமீபத்திய நடவடிக்கை என்பது தெளிவாக தெரிகிறது” என்று கூறி பாஜகவை விமர்சித்துள்ளார்.

மேலும் தேர்தல் வரும் நேரத்தில் ஜவர் விமான நிலையம் திறக்கப்பட்டதற்கு காரணம் என்ன ? என்று கேள்வி எழுப்பிய அவர் கடந்த 5 ஆண்டுகளாக உத்தரபிரதேச மாநிலத்தை ஆட்சி செய்து வந்த யோகி ஆதித்யாநாத் விமான நிலையத்தை தேர்தல் நெருங்கும் போது திறந்து கொள்ளலாம். அப்படி திறந்தால் தான் வாக்குகள் கிடைக்கும் என்று திட்டம் போட்டு அந்த திட்டத்தை ஒத்திவைத்தார் என்று பிரியங்கா கடுமையாக விமர்சித்துள்ளார்.

Categories

Tech |