சென்னை கிழக்கு மாவட்டம் திமுக சார்பாக மண்ணடியில் உள்ள டான் பாஸ்கோ தொடக்கப்பள்ளி மைதானத்தில் கிறிஸ்துவ பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி, திராவிட மடல் என்றால் என்ன என அனைவரும் கேட்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இங்கு அல்லேலுயா என வாழ்த்து சொல்வது தான் திராவிட ஆட்சி.
நலத்திட்ட பணிகள் தேர்தலுக்காக மட்டுமல்ல மக்களுக்காக எப்போதும் பணியாற்றி வருவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். எதிர்க்கட்சி, ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் நாம் நலத்திட்ட பணிகளை தொடர்கிறோம். அமைச்சர்கள், அதிகாரிகள்,ஊழியர்கள் அல்லும் பகலும் உழைத்ததால் மாண்டஸ் புயலின் போது மழை நீர் தேங்க வில்லை என பெருமிதம் தெரிவித்தார்.