Categories
மாநில செய்திகள்

தேர்தலுக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு?…. தமிழக அரசு முடிவு?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கடந்த 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளதாகவும், தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய “நியோகோவ்” என்ற வைரஸ் மற்றும் ஒமிக்ரானின் திரிபான பிஏ2 இரண்டு வைரஸும் அபாயகரமானது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பதவி இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு மீண்டும் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் நடத்தப்படும். அப்போது கட்சியினர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவார்களா ? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதற்கிடையே சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதேசமயம் தேர்தலுக்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதால் அடுத்த சில வாரங்களுக்கு கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார். எனவே கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு மற்றும் ஊரடங்கில் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |