சேலத்தில் நேற்று ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது .
தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலானது அடுத்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக துணை ராணுவ படையினர் சேலம் மாநகருக்கு பாதுகாப்பு அளிக்க வந்துள்ளனர் .
தேர்தல் நாளில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், துணை ராணுவ படையினர் போலீசாருடன் இணைந்து ,கொடி அணிவகுப்பை நடத்தினர். இந்த அணிவகுப்பு ஆனது நேற்றுக்காலை செவ்வாப்பேட்டை பால் மார்க்கெட் பகுதி மற்றும் மாலை புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்றது.