Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தேர்தலை இப்படி மட்டும் வைக்காதீங்க…! கள்ள ஓட்டு பயத்தில் திமுக…. நீதிமன்றம் ஓடியது …!!

80வயதுக்குடப்பட்ட முதியவர்களுக்கு தபால் ஓட்டு என்ற நடைமுறையை எதிர்த்து திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு அதிகமானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் உரிமையை விரிவுபடுத்த முடிவெடுக்கப்பட்டது. பீகார் தேர்தலில் 65 வயதிற்கு மேற்பட்டோருக்கு இந்த வசதி ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறுகின்ற தேர்தலில் 80 வயதுக்கு அதிகமான மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த வசதி வழங்குவது என்றும், அவர்கள் தபால் வாக்குகள் பதிவு செய்யலாம் எனவும், இதற்க்கு முன்பு இவர்கள் வாக்குகளை பதிவு செய்யாத நிலையில், அதனை குறைந்தது அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யவும் இந்த முடிவை தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த திட்டத்தை அமல்படுத்தும் பட்சத்தில் கள்ள ஓட்டுகள் பதிவாகி வாய்ப்பிருக்கிறது. இந்த வாக்குகளை பெறுவதற்காக தேர்தலில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களை சந்தித்து வாக்குகளை பெற வேண்டிய நிலை இருக்கிறது. அப்படி இருக்கும்போது முறைகேடு நடப்பதற்கும், கள்ள ஓட்டு 15 சதவீதம் வரை பதிவாகவும் வாய்ப்பு இருப்பதாக திமுக தரப்பில் டிசம்பர் முதல் வாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

ஆனால் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 2 நாட்களுக்கு முன்பு தொடரப்பட்டு இருந்தாலும் கூட தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தில் இதே முடிவெடுக்கப்பட்டுள்ளதால் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கின்றது. நீதிபதிகள் சுப்பையா – சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வரும் இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க இருக்கின்றது.

Categories

Tech |