Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்…. கருப்பு கொடி ஏற்றி போராட்டம்…. நெல்லையில் பரபரப்பு…!!

ஒரு கிராமத்தை சேர்ந்த வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழப்பத்தை கிராமத்தில் சுமார் 950 வாக்காளர்கள் இருக்கின்றனர். கடந்த தேர்தல் வரை தனியாக இருந்த கீழப்பத்தை 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு வார்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்திருந்தனர்.

நேற்று முன்தினம் கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நடந்த தேர்தலில் கீழப்பத்தை கிராமத்தில் வசிக்கும் 950 வாக்காளர்களும் ஓட்டு போடுவதற்கு சொல்லவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |