சிவகங்கை காரைக்குடி அருகே புதிய பேருந்து நிலையத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கைவினைக் கலைஞர்கள், பயிற்சி மையம் மற்றும் நெசவாளர் காலனி பகுதியில் உள்ள கனரா வங்கி ஆகியவை இணைந்து நடத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தேர்தல் மண்டல துணை தாசில்தார் மல்லிகார்ஜுன், சிறப்பு தாசில்தார் ராஜா, கனரா வங்கி சார்பில் சரவணன், மகேந்திரன், நீலம், வருவாய் ஆய்வாளர்கள் மெகர்அலி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேபோல் காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கண்காட்சி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிவகங்கை மாவட்ட சாலை பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்மணிமாறன் வரவேற்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியை வட்டாட்சியர் அந்தோணிராஜ் தொடங்கி வைத்தார். ஆசிரியர்கள் சுந்தரராமன், ராதாகிருஷ்ணன், முத்துக்குமார், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். வருவாய் ஆய்வாளர் மெகர்அலி முடிவில் நன்றி உரையாற்றியுள்ளார்.