தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேலும் மக்களும் வாக்களிக்க தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு வாக்களிக்க செல்வோருக்கு ஐந்து இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாதவரம், கே.கே நகர், சானிடோரியம், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. நாளை ஞாயிறு விடுமுறை என்பதால் இன்று பலரும் சொந்த ஊருக்கு செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு சிறப்பு அரசு பேருந்துகளில் 2.63 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணி நேர நிலவரப்படி தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு செல்ல 2.63 லட்சம் பேர் பயணித்துள்ளதாகவும், இதுவரை 37,955 பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.