Categories
தேசிய செய்திகள்

தேர்தல்களில் சதி செய்யும் பா.ஜ.க. …!!

பாரதிய ஜனதா கட்சி சதி செய்தே தேர்தல்களில் வெற்றி பெற்று வருவதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் திரு. அகிலேஷ் யாதவ் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

உத்திரபிரதேச இடைத்தேர்தலில் ஆளும் பாஜக வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான திரு அகிலேஷ் யாதவ் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் உண்மையான முகம் தற்போது வெளிப்படத் தொடங்கி இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். அக்கட்சின் ஆட்சியில் குற்றங்களும், குற்றவாளிகளும் அதிகரித்துள்ளன. அதிகாரத்தில் இருப்போர் ஆதரவால் குற்றவாளிகள் அச்சமின்றி செயல்படுகின்றனர்.

அப்பாவிகள், ஏழை மக்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் துன்பங்கள் அதிகரித்துள்ளன என திரு. அகிலேஷ் யாதவ் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் பாஜக கட்சி பலவீனப்படுத்தி வருவதாகவும் எல்லாத் தேர்தல்களையும் நம்பகத் தன்மை அற்றதாகவும் சர்ச்சைக்குரியதாகவும் பாஜக மாற்றிவிட்டதாகவும் திரு. அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |