நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் 1ரூபாயில் இருந்து 1கோடி ரூபாய்க்கான மருத்துவம் இலவசமாக இருக்கும் என சீமான் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த சீமான், இலவசங்கள் அறிக்கையில் வர வாய்ப்பு இருக்கிறதா என்றால், சரியான, சமமான, தரமான கல்வி. அறிவு வளம் என்பது ஒரு நாட்டின் மிக முதன்மையான அடிப்படை. அதை என் பிள்ளைகளுக்கு உலக தரத்திற்கு கொடுப்பேன். உலகத்தில் தென்கொரியா தான் முதலில் இருக்கிறது. அதை தாண்டுவேன் என்கிறேன், உறுதியாக தாண்டுவேன்.
அதற்குரிய திட்டம் என்னிடம் இருக்கிறது. இரண்டாவது உயிரை காக்கும் மருத்துவம் விற்பனைக்கு இல்லை. தனியார் முதலாளிகள் அப்பலோ, எம் ஜி ராமச்சந்திரன், காவேரி நடத்தினால் நடத்திக்கோ. ஆனால் நான் உங்களோடு சண்டை செய்வேன். என்னைவிட நீங்கள் சிறந்த மருத்துவத்தை கொடுத்து விடுவார்களா ? என் மக்களுக்கு என்று போட்டியிடுவேன். அப்பொழுது ஒரு ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் மருத்துவம் வரை என் மக்களுக்கு இலவசமாக கொடுப்பேன்.
ஏனென்றால் அறிவு, உயிர், தூய குடிநீர் இலவசம் என திட்டம் இருக்கும், குடிநீரை பாட்டிலில் அடைத்து விற்பதை தடை செய்திடுவேன். அதற்கு அப்புறம் தடையற்ற மின்சாரம் வழங்குவேன். உழவர் குடிக்கு இலவச மின்சாரம், இதுதான் எங்கள் இலவசம். அதற்கு பிறகு எல்லாம் இலவசம் கேட்கக்கூடாது.தமிழகத்திற்கு 6லட்சம் கோடி கடன் இருக்கு. 2கோடிக்கு மேல குடும்ப அட்டை. ஒரு வாஷிங் மெஷின் 15,000 கிட்ட வரும்.
காசு எங்கிருந்து கொண்டு வருவீர்கள். எங்கிருந்து எடுப்பீர்கள் என்பதற்கு முதலில் ஒரு திட்டத்தை வகுத்து சொல்லுங்கள்.இந்த மாதிரி பொருளாதாரத்திற்கு பெருக்கத்தை ஏற்படுத்தி, அந்த பணத்தை எங்கள் மக்களுக்கு கொடுப்போம் என சொல்லுங்க பாப்போம். ஏற்கனவே ஆறு லட்சம் கோடி கடன், எந்த துறையில் கடன் இல்லாமல் இருக்கிறது.
மின்துறைக்கு ஒரு லட்சம் கோடி, போக்குவரத்து துறைக்கு 84,000கோடி. நாட்டையும் மக்களையும் கடன்காரனாக ஆக்கிவிட்டது. மறுபடியும் மறுபடியும் வெற்று அறிக்கையில் இலவசம் தருவோம், அது தருவோம் என்பது கொடுமையா இருக்கு என தெரிவித்தார்.