தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். இதில் பேசிய அவர், மே 24ம் தேதியுடன் 15வது தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைகிறது. மக்களின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் இறுதியாக வெளியிடப்பட்ட அறிவிப்புகள், அரசாணைகள், பதிவுகள் குறித்த அறிக்கையை அனுப்பி வைக்கவும் தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவு.
தமிழகத்துடன் சேர்த்து கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் அறிவிப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 5 மாநில தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க 2,70,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. அனைத்தும் வாக்கு சாவடிகளும் கீழ் தளத்தில் இருப்பது உறுதி செய்யப்படுகிறது என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.