Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் அலுவலர்களுக்கு… இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கு ராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் ராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு தேர்தல் பணியாளர்களுக்கு நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பை தேர்தல் பார்வையாளர் எச்.எஸ்.சோனாவனே, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மதுசூதன் ரெட்டி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் வாக்குபதிவு அன்று தேர்தல் அலுவலர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து தெரிந்து கொள்வதுடன், சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் அதனை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.

வாக்குப்பதிவு அன்று எந்தவித தாமதமும் இல்லாமல் பணிகளை செய்து முடிக்க நல்ல பயிற்சியுடன் சென்றால்தான் ஏதுவாக இருக்கும் என பயிற்சியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. காரைக்குடி சட்டமன்ற உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அந்தோணி, தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேந்திரன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Categories

Tech |