தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 19-ஆம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபட்ட தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்கு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அதன்படி 1,532 பேருக்கு தபால் வாக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதனை அனைவரும் முறையாக விண்ணப்பித்து இன்று காலை 7 மணிக்குள் தேர்தல் அலுவலரிடம் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.