Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் ஆணையம் .. இனி தான் என் ஆட்டத்தை பாக்க போறீங்க…. வேற லெவலில் ஆடும் சீமான் …!!

நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் ஆணையம் ஒரு நாடக குழு என்று தான் சொல்ல வேண்டும். அது எப்படி செய்கிறது என்றால் பறக்கும்படை என்று ஒன்று போடுகிறது. பறக்கும் படையை போட்டு சாலையில் 370 கோடி நாங்கள் எடுத்து விட்டோம் என்று சொல்லுது ? யாரிடம் என்றால் அப்பாவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பணம் கட்டிவிட்டு அழைத்துச் செல்லலாம் என்று சொல்கின்ற மகனிடம் வாங்குகிறது.

கடைக்கு சரக்கு வாங்கி விட்டு வரலாம் என்று போவரிடம் பறித்துக் கொள்கிறது. இந்த மாதிரி எடுக்கிறதே தவிர….. நான்கூட அன்றைக்கே சொன்னேன்…. காசு அங்கு கொடுக்கிறார்கள், அங்குபோய் பிடியுங்கள் என்று சொன்னேன். பணம் கொடுக்கிறார்கள் என்று தெரிகிறது, காணொளி வருகிறது எல்லாம் தெரிகிறது.

ஆனால் கொடுத்தவர் மேல் பத்தாண்டு தேர்தலில் நிற்பதற்கு தடை என்று இரண்டு பேரை போட்டு இருந்தால் முடிந்திருக்கும், அதை செய்து. நாங்கள் தான் பெருமையா பேசிக்கொள்கிறோம் எண்ணியல் இந்தியா…. டிஜிட்டல் இந்தியா என்று  சொல்கிறோம். பட்டனை தட்டினால் எண்ணி சொல்ல போகிறது, இதுக்கு ஏன் 25 நாள் ஒரு இடத்தில் அடைத்து வைக்க வேண்டும்.

அமெரிக்காவில்  50 மாகாணங்கள்,  ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வொரு நேர வித்தியாசம் இருக்கிறது. ஆனாலும் அது வாக்கு சீட்டு முறையில் வாக்கு பதிவு செய்து, இரவே கையோடு எண்ணி இரவோடு இவர் தான் அமெரிக்கவுடைய அதிபர்,  தலைவன் என்று பேசி விடுகிறது. அந்த நாடு கூட நாங்கள் டிஜிட்டல் அமெரிக்கா என்று பேசவில்லை. நீங்கள் தான் பெருமை பேசுகிறீர்கள்.

நாங்கள் ஸ்மார்ட்சிட்டி ஆகிவிட்டோம், டிஜிட்டல் இந்தியா ஆகிவிட்டோம், பணமில்லை பரிவர்த்தனை வந்துட்டோம்,  மொபைல் பரிவர்த்தனை வந்துட்டோம் இப்படி எல்லாம் பேசிவிட்டு,  கடைசியில் 25 நாள் பெட்டியை மூடி விட்டு, ஒவ்வொரு நாளும் திக்கென்று இருக்கின்றோம் என தெரிவித்தார்.

புதிதாக அமையக்கூடிய அரசு… நீங்களாக இருந்தாலும் சரி, மற்றவர்களாக இருந்தாலும் சரி முதல்கட்டமாக எதை  செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள் ? என்ற கேள்விக்கு,

நான் வந்தால் தம்பி பரோட்டா சூரி சொல்வது மாதிரி….  அழித்து ஆடுபவன். முதலில் இருந்து இதை அழிப்பா….  எல்லாரும் வேடிக்கையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 6 லட்சம் கோடி கடனுக்கு வந்ததும் மஞ்சள் நோட்டீஸ் கொடுப்பேன் என்று சொல்கிறேன் சிரிக்கிறான்…. கருணாநிதி, ஜெயலலிதா வாங்கிய கடன்களுக்கு  எல்லாம் நான் கையெழுத்து போட்டு கொடுக்க முடியாது. இது என் அரசு…  வாங்கியவனின் வாரிசு இருக்கிறது, கேட்டு  வசூலித்துக்கொள்.

இது ஏன் அரசு…. ஒரு ரூபாய் வாங்கினாலும் நான் பொறுப்பேற்கிறேன். என் மக்களுக்கு இந்த கடன் சுமையை ஏத்த முடியாது நான் கொடுக்க மாட்டேன். நான் வேற லெவலில் ஆட வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த ஆட்டத்தை பொறுத்திருந்து பாருங்கள்…. இப்பவே சொன்னால் அதில் இன்ட்ரஸ்ட் இருக்காது.

Categories

Tech |