Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் ஆணையம் தடை; திமுக எம்பி ஆ.ராசா கோரிக்கை நிராகரிப்பு!

திமுக எம்பி ஆ.ராசா பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்ததை எதிர்த்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் திமுக எம்பி ஆ.ராசா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தாய் பற்றி அவதூறாக பேசியதாக  வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் திமுக எம்பி ராசா 2 நாட்களுக்கு பிரச்சாரம் செய்ய தடை விதித்தும், நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து நீக்கியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பிரசாரம் செய்ய தடை விதித்ததை எதிர்த்து ஆ.ராசா உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் அவசர முறையீடு செய்யப்பட்டது. ஆ.ராசா தரப்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, தேர்தலுக்கு சில நாட்களே உள்ளதால் தற்போதைய நிலையில் பரப்புரைக்கு தடை விதித்துள்ளதாகவும், எனவே இவ்வழக்கை அவசர வழக்காக நாளை விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார். ஆனால், நீதிபதிகள் அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.

Categories

Tech |