தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் நகராட்சி தேர்தலை ஏழு நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக ஆட்சியானது நீதிமன்றத்தில் செய்த முறையீட்டை நீதிமன்றமானது அவ்வளவு கால அவகாசம் கொடுக்க முடியாது என நிராகரித்துவிட்டது. இதுகுறித்து அதிமுக தரப்பில் கூறப்படுவதாவது, தேர்தல் என்றாலே திமுகவிற்கு பயம். இவ்வாண்டை போல் கடந்த 2016 ஆம் ஆண்டும் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என்று திமுக அரசானது நீதிமன்றத்தில் தடை ஆணையை பெற்றது.
அப்பொழுது அதிமுக அரசானது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சூழ்நிலையில் திமுகவானது சாதிவாரியாக வார்டு ஒதுக்கீடு நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தடை ஆணையை பெற்றது. இதன் காரணமாகவே தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்த நிலையில் தற்சமயம் ஊரக உள்ளாட்சி பகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் திமுக ஆட்சியானது தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்த மனுவானது நிராகரிக்கப்பட்டுள்ளது. நீட் விலக்கு, 7 பேர் விடுதலை, மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என பொய்யான வாக்குறுதிகளை தந்து ஆட்சிக்கு வந்துவிட்ட நிலையில், அரசால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற முடியாதலால் தமிழக மக்கள் உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஒதுக்கி விடுவார்களோ என்ற பயத்தில் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது” என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.