கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது அறிவித்தாலும் அதனை நடத்த தயாராக இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு வாக்காளர் பட்டியல் பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்த தயாராக இருப்பதாகவும் கூறினார். சமூக வலைத்தளங்களில் பிரசாரங்கள் செய்வதை தடுக்க கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு இருதப்பாகவும்.
ராக் உள்ளிட்ட பிற சமூக வலைத்தளங்களில் பிரசாரங்கள் மேற்கொண்டால் அது குறித்து புகார் அளிக்கும் பட்சத்தில் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரு. சத்யபிரதா சாகு தெரிவித்தார். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்கு அளிப்பதில் சிரமம் இருப்பதால் அவர்கள் தபால் வாக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.