தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதையடுத்து இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் கமல், “தேர்தல் என்பது போர்க்களம் அல்ல. இரு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியும் அல்ல. வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரு முனைகளை மட்டுமே தேர்தலின் முடிவு என கருதிக் கொள்ளக்கூடாது. தேர்தல் நேர்மையாக நிகழ வேண்டுமென விரும்புகிறேன். யார் வென்றால் நல்லது என மக்கள் நினைக்கிறார்களோ அவர்கள் வெல்லட்டும் நம்மில் யார் வந்தாலும் கோவை தெற்கு தொகுதி மக்கள் வென்றதாகவே பொருள்” என்று கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.