சென்னை தலைமைச் செயலகத்தில் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் சமயத்தில் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவருடைய மனிதநேயமற்ற செயலால் அவர் சிறைவாசம் அனுபவித்தார். அது அவருக்கு கிடைத்த சரியான தண்டனைதான். ஆனால் அதிமுகவினரோ தங்கள் மீது பொய்வழக்கு போட்டதாக கூறினர். அதிமுகவினரின் இந்த பொய்யை மக்கள் அதனை ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.
உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்ததை மறைக்க அதிமுக செய்தியாளர்களுக்கு மத்தியில் பொய் பேட்டி அளித்து வருகிறது. எவ்வித முறைகேடுகளும் இல்லாமல் நியாயமான முறையில் நடைபெற்ற இந்த தேர்தல் குறித்து பேசுவதற்கு கூட அதிமுகவிற்கு தகுதி கிடையாது. கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த 7000 கோடி வருவாய் பற்றாக்குறை தற்போது சரி செய்யப்பட்டு உள்ளது.!” என அவர் கூறினார்.