Categories
தேசிய செய்திகள்

உடனே உத்தரவிடுங்க மை லார்ட்… தேர்தல் இலவசத்துக்கு எதிரான வழக்கில்…. சுப்ரீம் கோர்ட் முக்கிய கருத்து…!!

அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தின் போது இலவச வாக்குறுதிகளை அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு தடைவிதிக்க கோரியும் வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இவற்றிற்கு எதிராக ஆம்ஆத்மி சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் பேசியதாவது, இது ஒரு விவகாரம் இல்லை என ஒருவரும் கூறவில்லை.

இதுஒரு தீவிர விவகாரம் ஆகும். அரசியல் கட்சிகளானது தேர்தல் காலத்தில் இலவசபொருட்கள் பற்றிய வாக்குறுதி அளிப்பது மற்றும் விநியோகிப்பது என்பது பொருளாதாரத்தில் பண இழப்பு ஏற்படும் இந்த தருணத்தில் ஒரு தீவிர விவகாரமாக கொள்ளப்படுகிறது என்று கூறினார். இருப்பினும் நல திட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் வேறுபாடுகள் இருக்கிறது என்று சுப்ரீம்கோர்ட்டில் ஆம் ஆத்மி கட்சியானது கூறியது. ஆனால் பொருளாதாரத்தில் பண இழப்பு ஏற்படுகிறது எனக்கூறிய சுப்ரீம்கோர்ட்டு, மக்களின் நலன்களில் சம நிலை பேணப்பட வேண்டும் எனவும் தெரிவித்து இருக்கிறது.

இதனிடையில் பலன் பெறுவோர் அது வேண்டும் என விரும்புகின்றனர். எங்களுடையது வளம் மிக்க மாநிலம் என்று கூறுகின்றனர். எனினும் சிலர் நாங்கள் வரி செலுத்துகிறோம். பணம், வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டுமென்று கூறுகின்றனர். இதன் காரணமாக இருதரப்பினரின் விசயங்களும், ஒரு குழுவின் முன் விசாரிக்கப்பட வேண்டும் என்று கோர்ட்டு கூறியதுடன், இவ்வழக்கை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |