தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் நடத்தை விதிகளை வெளியிட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக பின்பற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் விதிகள் அனைத்தும் தேர்தல் முடியும் வரை பின்பற்றபடப்படும். இதன்படி சாதிகள், சமூகத்தினர், மதத்தினர் போன்றவற்றிற்கு இடையே நிலவும் வேற்றுமையை தூண்டும் வகையில் எந்த செயல்களிலும் அரசியல் கட்சிகள் ஈடுபடக்கூடாது. வேட்பாளர் மக்களின் சாதி உணர்வை தூண்டும் வகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பேசக்கூடாது. கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் போன்றவற்றை தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெறும் இடமாக மாற்றம் கூடாது.
வேட்பாளர்களை அவர்களில் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக எதுவும் பேசக்கூடாது அதோடு தலைவர்களை அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறை குறித்து விமர்சனம் செய்யக்கூடாது. இப்போது மக்கள் ஓட்டு போட வேண்டி ஓட்டுச்சாவடிக்கு செல்ல எந்த வாகன ஏற்பாடுகளும் செய்ய கூடாது. அமைச்சர்கள் தங்கள் பணிக்காக அரசு ஊழியர்களை அல்லது அரசு அமைப்புகளை பயன்படுத்தக்கூடாது வேட்பாளர்கள் தொகுதியில் உள்ள மக்களுக்கு இந்த சலுகையும் வழங்க கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.