மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 12-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவும், பறக்கும் படையினரும் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மருத்தூரில் காவல்துறை ஆய்வாளர் வீரபாண்டியன் மற்றும் காவல்துறையினர் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சாந்தி தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வேன், கார், பேருந்துகளில் மயிலாடுதுறைக்கு வரும் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.