Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் நெருங்கியாச்சு… எந்த அசம்பாவிதமும் நடந்துற கூடாது… வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர பாதுகாப்பு..!!

சிவகங்கை சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் மையமான காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பாதுகாப்பு முன்னேற்பாடாக தடுப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அலுவலகங்களை மாவட்ட ஆட்சியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இதனால் அந்த கல்லூரியில் வாக்கு எண்ணும் இடத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பு கம்பி வேலிகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள இடத்தை சுற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |