தேர்தல் நெருங்கி வருவதால் நாம் கையில் எவ்வளவு பணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு மார்ச் 12ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. எந்தெந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது என்ற விவரங்களையும் அறிவித்து வருகின்றது.
இதனால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நாம் பணம் எடுத்து சென்றால் அதற்கான உரிய ஆவணங்களையும் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.இதன் காரணமாக நாம் 50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை எடுத்து சென்றோம் எனில் அதற்கு உரிய ஆவணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.