Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தேர்தல் பணியாற்ற உள்ள அதிகாரிகளுக்கு…. தீவிர பயிற்சி… ஆட்சியர் விளக்கம்..!!

ராணிப்பேட்டையில் தேர்தலில் பணியாற்ற உள்ள அதிகாரிகளுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்பானது நடைபெற்றது .

தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தலில் பணி புரியும் அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்தப் பயிற்சி வகுப்பானது ,மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடந்துள்ளது. இதில் தேர்தல் பணியாற்றபோகும் அரசு அலுவலர்கள் ,வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார்கள் பல அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கினார்.

தேர்தல் நாளன்று கடைபிடிக்க வேண்டிய பணிகள், தேர்தலுக்கு முன் நடக்க வேண்டிய பணி, வாக்கு இயந்திரங்கள் ஏதேனும் பழுதடைந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை ஆகியவற்றை விளக்கி எடுத்துரைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலரான ஜெயச்சந்திரன் ,தேர்தல்  அலுவலர்களான  இளம்பகவத், சிவதாஸ் , மணிமேகலை,அலுவலக பொது மேலாளரான  விஜயகுமார் மற்றும் தேர்தல் பிரிவு தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டன.

Categories

Tech |