Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள்… வாக்கு செலுத்துவதற்கு முன்னேற்பாடு… தேர்தல் நடத்தும் அதிகாரி ஆய்வு..!!

பெரம்பலூரில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊர்க்காவல் படை வீரர்கள், காவல்துறையினர் தபால் வாக்கினை செலுத்தினர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பணியாற்ற ஊர்க்காவல் படையினர், காவல்துறையினர் மற்றும் முன்னாள் ராணுவதினர் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 72 மண்டல அலுவலர்களுக்கும், 3,916 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும், குன்னம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 816 காவல்துறையினருக்கும், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 531 காவல்துறையினருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரியலூர் மாவட்டத்தில் பணியாற்றக்கூடிய காவல்துறையினர் 146 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பிற மாநிலங்களில் பணியாற்றக்கூடியவர்களுக்கும், தேர்தலில் பணியாற்ற உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கும், ஊர்க்காவல் படை வீரர்களுக்கும் தபால் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் வாக்கு கடந்த 27-ஆம் தேதி முதல் செலுத்தினர். மேலும் தேர்தல் அலுவலர்களால் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து தபால் வாக்கு பெறும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஊர் காவல் படை வீரர்கள், காவல்துறையினர், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் வாக்குகள் செலுத்துவதற்கு பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 29-ஆம் தேதி மாவட்ட நிர்வாகத்தால் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு ஊர்க்காவல் படை வீரர்கள், காவல்துறையினர், முன்னாள் ராணுவ வீரர்கள் பெட்டி ஒன்றில் ஆர்வத்துடன் வந்து தபால் வாக்களித்தனர். பெரம்பலூர் தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜா, உதவி ஆணையர் ஷோபா தபால் வாக்கு செலுத்தும் பணியை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Categories

Tech |