Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேர்தல் பணி முடிந்தபின்… போலீசாருக்கு 4 நாட்கள் விடுமுறை… வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!!

கடலூர் மாவட்டத்திலிருந்து தேர்தல் பணிக்கு சென்ற போலீசாருக்கு 4 நாள் விடுமுறை தந்து எஸ்.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்..

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.. அதன்படி கடந்த 6ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.. நாளை மறுநாள் இரண்டாவது கட்டமாக தேர்தல் நடக்கிறது.. இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் உள்ள போலீசார் அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..

இந்த நிலையில் போலீசாருக்கு மகிழ்ச்சி தரும் விதமாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது,  அக்டோபர் 9ஆம் தேதி தேர்தல் பணி முடிந்த பின் தொடர்ந்து 4 நாள் போலீசாருக்கு விடுமுறை என்று கடலூர் மாவட்ட எஸ்.பி சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.. தேர்தல் பணிக்கு சென்றவர்களுக்கு விடுமுறை அளித்ததால் கடலூர் மாவட்ட போலீசார் மகிழ்ச்சியில் உள்ளனர்…

 

Categories

Tech |