Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் பயிற்சி கூட்டம்…. கலந்துகொண்ட பணியாளர்கள்…. கட்டுப்பாடுகளை அறிவித்த மாவட்ட ஆட்சியர்….!!

தேர்தல் விதிமுறைகளை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் லோகன், உதவி இயக்குனர் ராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தேர்தலில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து பயிற்சி அளித்தார்.

அதில் ஒவ்வொரு மண்டல அலுவலரும்  10 வாக்குப்பதிவு மையங்களை கண்காணிக்க வேண்டும். மேலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக தொழில்நுட்ப பொறியாளரை தொடர்பு கொண்டு சரி செய்ய வேண்டும், வாக்குப்பதிவு நிறைவு பெற்று இயந்திரங்களை வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பும் வரை முழு கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கூறியுள்ளார்.

Categories

Tech |