தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைக்காக விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்ட அனுமதி வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றி, அதன் செலவை வேட்பாளர்களிடம் வசூலிக்க வேண்டும். ஆகவே உத்தரவை மீறி போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி காவல்ஆணையருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.