தேர்தல் பிரசாரத்தின்போது ஆரத்தி தட்டில் பணம் போட்ட நத்தம் விஸ்வநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.
அதுமட்டுமன்றி தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பங்கேற்றார். திமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பண பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். நத்தம் அருகே காட்டு வேலாம் பட்டியில் நத்தம் விசுவநாதன் பிரசாரம் செய்த கூட்டத்தில் பெண்கள் ஆரத்தி எடுத்தனர். அப்போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுத்ததாக வீடியோ ஆதாரத்துடன் போலீசில் தேர்தல் அதிகாரி புகார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தேர்தல் பிரசாரத்தின்போது ஆரத்தி தட்டில் பணம் போட்ட நத்தம் விஸ்வநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி தேர்தல் நடத்தும் அலுவலர் மைக்கேல் ஆரோக்கியராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.