Categories
மாநில செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்திற்காக… தமிழகத்திற்கு வரும் பிரியங்கா காந்தி..!!

தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகத்திற்கு பிரியங்கா காந்தி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்தத் தேர்தலில் திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தேர்தலை சந்திக்கின்றது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இறுதிகட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியும் நான்காம் கட்ட பிரசாரத்திற்காக வரும் 28ஆம் தேதி சேலத்திற்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |