கரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களின் மீது தாக்குதல் நடத்திய வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சந்தமநாயக்கன்பட்டியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் துணிக்கடை வியாபாரி. மேலும் இவர் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் மாலை 4 மணி அளவில் பிரச்சாரத்திற்காக வாகனத்தில் கவுண்டபுதூருக்கு வாக்கு சேகரிக்க பல்வேறு மக்களுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த தி.மு.க சிலர் ஒன்று சேர்ந்து பாலசுப்பிரமணி மற்றும் அவருடன் பிரசாரத்தில் ஈடுபட்ட மக்களை தாக்கியுள்ளனர்.
இச்சம்பவத்தில் பலசுப்பிரமணியன், கார்த்திக், இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுக்குறித்து பாலசுப்ரமணியன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் தாக்குதல் நடத்திய 15 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.