லைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு அக்டோபர் 9 ம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி ‘விங்க்ஸ்’ கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருக்கிறது.இந்நிலையில் கழகத் தலைவர் என்ற பொறுப்பை கண்ணும் கருத்துமாக எனது இதயத்திலும் தோளிலும் சுமந்திருக்கும் உள்ளங்களில் ஒருவரான நான் உடன்பிறப்புகளின் உளமார்ந்த வாழ்த்துக்களையும் ஒரு மனதான நல்லாதரவையும் எதிர்நோக்கி அக்டோபர் 7ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும், நம்முடைய திராவிட மாடல் ஆட்சித் திறனை, இந்தியாவின் பிற மாநிலங்களும் ஏற்றுப் போற்றிப் பாராட்டுகின்றன என தெரிவித்துள்ளார்.