தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலையொட்டி மூடி வைக்கப்பட்ட தலைவர்கள் சிலை திறக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலின் முடிவுகள் வருகின்ற மே மாதம் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அனைத்து பகுதிகளிலிருக்கும் அரசியல் கட்சியின் தலைவர்கள் சிலையும், கட்சிக் கொடிக்கம்பங்களையும் மறைத்து வைக்க உத்தரவிட்டது. அதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் சில முக்கிய தலைவர்களின் சிலைகள் மூடி வைக்கப்பட்டது.
இதனையடுத்து தேர்தல் முடிவடைந்த நிலையில், இதனை முன்னிட்டு மூடிவைக்கப்பட்ட சிலைகள் திறக்கப்படுமா? என்று அரசியல் கட்சியினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதாவது தேர்தல் கால கட்டத்தில் பணம் பட்டுவாடா நடைபெறாமலிருக்க தேர்தல் குழு நியமித்த பறக்கும் படையினர் தேர்தல் முடிவடைந்த நிலையில் வாகன சோதனையில் ஈடுபடவில்லை. அந்த வகையில் தேர்தலையொட்டி மூடி வைக்கப்பட்ட சிலைகளை திறக்க அரசியல் கட்சியினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.