நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தேர்தல் முடிவு வந்த பின்னர் கூட்டுறவு சங்க தலைவர்களின் பதவிகள் மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் உள்ளாட்சி தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டமானது நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, “நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ஈடாக, இந்த தேர்தல் வெற்றியானது அமையும். மேலும் மற்றவர்கள் நம்மை எதிர்த்து தேர்தலில் நிற்க அஞ்சும் அளவிற்கு நமது வெற்றியானது அமைய வேண்டும். மேலும் தேர்தல் முடிவுக்கு பின்னர் கூட்டுறவு சங்கங்களானது கலைக்கப்படும்” என்று கூறியுள்ளார்.