Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தேர்தல் முன்விரோதம்…. திடீரென மோதிக்கொண்ட கும்பல்…. போலீஸ் அதிரடி…!!

முன்விரோதம் காரணமாக  மோதலில் 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நமச்சிவாயபுரம் கிராமத்தில் கொடையாளப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் மூலமாக சீரமைப்பு பணிகள் தொடங்கியது. இந்த கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை, ராயதுரை உள்ளிட்ட ஏராளமானோர் இந்த பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சின்னதுரைக்கும், ராயதுரைக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் ஒருவருக்கு ஒருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து சின்னசேலம் காவல்நிலையத்தில் சின்னதுரை மற்றும் ராயதுரை தனித்தனியாக புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜேந்திரன், ராயதுரை, சின்னத்துரை, சிதம்பரம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |