Categories
அரசியல் பல்சுவை மாநில செய்திகள்

தேர்தல் ரத்து…? – வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியாளருமான திவ்ய தர்ஷினி திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் ரத்து ஒத்திவைப்பு என்று வெளியாகும் எந்த வதந்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தால் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது கடமை எங்களுக்கு உண்டு என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |