சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஆலங்குடி கிராமத்தில் பிரச்சாரத்திற்கு வரும் வேட்பாளர்களை வரவேற்பதற்காக கிராம மக்கள் ஆரத்தி தட்டுடன் காத்திருந்தனர்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டு இருப்பதால் அதிகாரிகள் ஒரு பக்கம் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தேர்தலுக்கான பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். கட்சி தலைவர்கள் ஒரு பக்கம் பிரச்சாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வாக்காளர்களாகிய பொதுமக்கள் பிரச்சாரத்திற்கு வரும் தலைவர்களை வரவேற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஆலங்குடி கிராமத்தில் பிரச்சாரத்திற்காக தி.மு.க. வேட்பாளர் வந்துள்ளனர். அப்போது அந்த கிராம மக்கள் அவர்களை ஆரத்தி எடுப்பதற்காக தட்டுகளுடன் தயாராக இருந்தனர். தேர்தல் வந்துவிட்டாலே கிராமங்களே களை கட்ட தொடங்கி விடுகிறது. இந்த கிராமத்தில் மக்கள் ஆரத்தி தட்டுக்களை வரிசையாக அடுக்கி வைத்து அதன் அருகில் நின்று வேட்பாளர்களை வரவேற்க தயார் நிலையில் உள்ளனர்.