Categories
அரசியல்

தேர்தல் வாக்குறுதியில் இலவசங்கள் எப்படி கொடுப்பீங்க…? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய உத்தரவு…!!!!

தேர்தலின் போது அளிக்கப்படும் நிதி ஆதாரத்தை வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் விளக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் தேர்தல் அரசியலை பொருத்தமட்டில் ஏராளமான வாக்குறுதிகளை முன் வைத்தே கட்சிகள் களம் கண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளில் ஏதாவது ஒரு இலவசத்தை கட்டாயமாக சேர்த்து விடுகின்றார்கள். இது விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை ஏற்றம் காண செய்யும் நடவடிக்கையாக இருந்தாலும் அதில் வசதி படைத்தவர்களும் பயன்படுவதை தடுக்க முடியவில்லை. இதற்கு இடையே இலவசங்கள் மக்களை சோம்பேறிகளாக மாற்றுகின்றது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் வெறும் விமர்சனமாக மட்டுமல்லாமல் யாரும் எதிர்பாராத விதமாக வழக்கு விசாரணையை மாற்றியுள்ளது. அதாவது தேர்தலின் போது அரசியல் கட்சிகள் இலவசங்களை வாக்குறுதியாக அழித்து வருவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய மாநில அரசுகள், தேர்தல் ஆணையம் போன்ற பல்வேறு தரப்பினர் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கின்றனர். இதன்பின் இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவை எனக் கூறி மூன்று பேர் அடங்கிய அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி தேர்தல் வாக்குறுதிகளுக்கான நிதி ஆதாரம் திரட்டப்படுவது எப்படி என்பது பற்றிய உண்மை தகவலை வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் விளக்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறது. மேலும் இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள பரிந்துரை கடிதத்தில் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக போதிய தகவல்கள் விளக்கப்படாமல் உள்ளது இதனால் நிதிநிலை தன்மை மீது விரும்பத்தாகாத தாக்கங்கள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக தேர்தலில் போது அளிக்கப்படும் நிதி ஆதாரத்தை வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் விளக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |