தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வந்தனர்.
இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கி வாக்கு சேகரித்தனர். இந்நிலையில் நேற்று இரவு 7 மணியோடு தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இதற்கடுத்து யாரும் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விதிகளை மீறி சமூக வலைதளங்களில் அதிமுக விளம்பரம் செய்து வருவதாக திமுக சார்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தலை முறையாகவும், நேர்மையாகவும் நடத்த கோரி தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.